தேர்தல் நெருங்கிவிட்டாலே தமிழகத்தில் ஆங்காங்கு பணம் பறிமுதல் செய்யப்படுவது வழக்கம். வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுப்பதற்காகவே தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு செலுத்த வாக்காளர்கள் பணம் வாங்க கூடாது என்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் பணப்பட்டுவாடா பற்றிய புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழகத்தில் பல இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி பணத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அதிகளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபிறகு வெள்ளிக்கிழமை (மார்ச் 29) வரை ரூ.70.90 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
அதேபோல, ரூ.88.70 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள் மற்றும் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 313 கிலோ தங்கமும், 370 கிலோ வெள்ளியும், ரூ.22.94 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.�,