புதிய மத்திய நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டுக்கு முன்பான தனது முதல் கூட்டத்தில் இன்று வேளாண் துறையினரிடையே ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ஜூலை 5ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அதற்கு முன்பாக, பல்வேறு துறையினரிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனைகள் மேற்கொள்கிறார். அதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 11) நடைபெற்றது. அதில் வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை உறுப்பினர்களிடையே பொருளாதார வளர்ச்சி, வேலை உருவாக்கம், வறுமை ஒழிப்பு, சமூக உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “வேளாண் ஆராய்ச்சி, கிராமப்புற மேம்பாடு, தோட்டக்கலை, உணவு பதப்படுத்துதல், கால்நடை வளர்ப்பு, மீன்வளம் மற்றும் வேளாண் ஸ்டார்ட் அப் துறைகளில் நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, வேளாண் பொருட்களுக்குப் போதிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். மீன்வளத் துறையின் மேம்பாட்டுக்காக அத்துறையின் பங்குதாரர்களிடமும் இதேபோன்ற ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். வேளாண் துறைக்கே தற்போதைய அரசு முன்னுரிமை வழங்கும்” என்றார்.
**
மேலும் படிக்க
**
**
[அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/11/26)
**
**
[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)
**
**
[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)
**
**
[மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்](https://minnambalam.com/k/2019/06/11/21)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”