Bநிவேதாவின் இரட்டை சவாரி!

Published On:

| By Balaji

வித்தியாசமான ரோலில் தான் நடித்துள்ள திமிரு புடிச்சவன் எனும் படம் திரையரங்குகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தனது அடுத்த படம் குறித்த ஸ்கெட்ச்சைப் போட ஆரம்பித்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

அட்டகத்தி தினேஷுடன் ஒருநாள் கூத்து, உதயநிதியுடன் பொதுவாக என் மனசு தங்கம், ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன் உள்ளிட்ட குறிப்பிட்ட சில படங்களில் வலம்வந்து விட்டாலும் முதல்நிலை நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு நிவேதாவுக்கு இன்னும் கிட்டவில்லை.

தமிழ்ப் பெண்ணான நிவேதா, மென்டல் மதிலோ எனும் படம் வாயிலாக தெலுங்கில் என்ட்ரியாகி, தற்போது சரியாக ஓர் ஆண்டு ஆகப் போகிறது. இந்த நிலையில் மீண்டும் ஒரு தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் நிவேதா.

அந்தவகையில் ‘நேனு சைலஜா’ படத்தை இயக்கிய இயக்குநர் கிஷோர் திருமலா இயக்கும் ‘சித்ரலஹரி’யில் நடிக்கிறார். சாய் தரம் தேஜ் கதாநாயகனாக நடிக்கும் இதில் இரண்டு கதாநாயகிகளுள் ஒருவராகத்தான் இணைந்துள்ளார் நிவேதா. அந்த வகையில் மற்றொரு கதாநாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கவுள்ளார்.

நவம்பர் 19ஆம் தேதி படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள இந்தப் படத்தை ரங்கஸ்தலம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தத் தெலுங்குப் படம் போக, வெங்கட் பிரபு இயக்கும் பார்ட்டி, பிரபுதேவா நடிக்கும் பொன் மாணிக்கவேல், எழில் இயக்கும் ஜகஜால கில்லாடி உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் என பிஸியாக இயங்கி இரட்டை சவாரி செய்துவருவதால் அடுத்த ஆண்டு தனது திரைப்பயணத்தில் புதிய மாற்றங்களை நிவேதா பெத்துராஜ் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share