சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானமொன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இன்று (மே 20) அதிகாலையில் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டது ஸ்கூட் ஏர்லைன்ஸ் எனும் தனியார் விமானம். இந்த விமானத்தில் 165 பயணிகள் உட்பட 172 பேர் இருந்தனர். நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, இந்த விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டது. இதனால், என்ஜினில் இருந்து தீப்பொறி எழுந்தது. அந்த நேரத்தில் சென்னை அருகே அந்த விமானம் பறந்து கொண்டிருந்தது.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தை இறக்க அனுமதி கோரப்பட்டது. விமான கோளாறு காரணமாக, அவ்விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், அதிகாலை 3.40 மணியளவில் அந்த விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தற்போது விமானத்தில் ஏற்பட்ட கோளாறைச் சரி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இன்று மாலையில் மீண்டும் இந்த விமானச் சேவை தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாகத் தரையிறக்கப்பட்டதால் விமானத்துக்கு ஏற்பட்ட ஆபத்து தவிர்க்கப்பட்டது.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
.
�,”