நடிகர் தனுஷ் உயர்நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
மதுரை மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்தவர்கள் கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர். இவர்கள், தனுஷ் தங்கள் மகன் என்றும் தங்களுக்கு வயதாகி விட்டதால் மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக ரூ.65 ஆயிரம் வழங்க தனுசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டு மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.
இதை எதிர்த்து தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், தனுஷ் யாருடைய மகன் என்பதை அறிய அவரது பள்ளிச்சான்றிதழ் மற்றும் ஆவணங்களை இருதரப்பினரும் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி சான்றிதழ்களை இருதரப்பினரும் தாக்கல் செய்தனர். விசாரணையின் முடிவில், தனுஷுக்கு எதிராக மேலூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து, கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது நடிகர் தனுஷ் போலியான கல்விச் சான்றிதழ், பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியதாகக் கூறி மதுரை கோ.புதூர் காவல் நிலையத்திலும், மாநகர காவல் ஆணையரிடமும் கதிரேசன் புகார் அளித்தார்.
இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து, தான் அளித்த புகார் மனுமீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை 6ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று (ஜூலை 15) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு நீதித்துறை நடுவர் விசாரணையை ஒத்திவைத்தார்.
**
மேலும் படிக்க
**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
�,”