bதத்துவத்தைப் பற்றி யோசிக்க ஒரு நாள்!

Published On:

| By Balaji

K

தினப் பெட்டகம் – 10 (15.11.2018)

இன்று உலக தத்துவ தினம் (World Philosophy Day)

1. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தின் வியாழன், உலக தத்துவ தினமாகக் கொண்டாடப்படுகிறது.

2. மாறி வரும் காலங்கள் நம் முன்வைக்கும் சிக்கல்களை சமாளிப்பதற்குத் தேவையான புதிய சிந்தனைகளையும் எண்ணங்களையும் வளர்ப்பதற்குத் தேவையான செயல்பாடுகளை ஊக்குவிப்பதுதான் இந்நாளின் நோக்கம்.

3. தத்துவம் என்பது அறிவு, அனுபவம், இருப்பு மற்றும் யதார்த்தத்தைப் பற்றிய படிப்பைக் குறிக்கிறது.

4. ஐநா சபையின் வரையறையின்படி, உலக அமைதிக்கு அடிப்படையான ஜனநாயகம், மனித உரிமைகள், நீதி, சமத்துவம் ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான கருத்தியல் தளத்தை அமைப்பது தத்துவம்.

5. முதன்முதலில் 2005ஆம் ஆண்டில், உலக தத்துவ தினம் கொண்டாடப்பட்டது.

6. ரெனே டெகார்ட் (Rene Descartes) என்னும் ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர் மேற்கத்தியத் தத்துவத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார்.

7. தலீஸ் ஓ மெலிசியஸ் (Thales of Miletus) பொதுவாக, தத்துவத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார்.

8. தலீஸ் கிரேக்க நாட்டைச் சேர்ந்த தத்துவவியலாளர், கணிதவியலாளர், வானியலாளர்.

9. இந்த ஆண்டின் உலக தத்துவ தினம், மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனம் செய்த 70ஆவது ஆண்டில் வருகிறது.

10. தற்போது நமக்கு என்ன மாதிரியான தத்துவங்கள் தேவை, அதை எப்படி உருவாக்குவது, எப்படி கற்பது கற்பிப்பது என்பது சம்பந்தமான கலந்துரையாடல்கள், விவாதங்கள் கொண்ட பல்வேறு நிகழ்வுகள் உலகமெங்கும் நடைபெறும்.

**- ஆஸிஃபா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share