தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று (ஜூன் 10) டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
புதிய மத்திய அரசு அமைந்த நிலையில், புதிய உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் மாநில ஆளுநர்கள் புதிய உள்துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து பரஸ்பர அறிமுகம் செய்வது நிர்வாக ரீதியிலான நடைமுறை.
இந்த வகையில் பல மாநில ஆளுநர்கள் டெல்லிக்கு சென்று புதிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று காலை டெல்லி சென்ற தமிழக ஆளுநர் புரோகித் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழக ஆளுநரைப் போலவே மேற்கு வங்காள ஆளுநர் கேஷாரி நாத் திரிபாதி, தெலங்கானா, ஆந்திர மாநிலங்களின் ஆளுநரான நரசிம்மன், ஜார்க்கண்ட் ஆளுநர் த்ரவுபதி முர்மு, அருணாசல் பிரதேச ஆளுநர் மிஷ்ரா ஆகியோரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர்.
இது வழக்கமான சந்திப்புதான் என்றும் இதில் மாநிலன் சார்ந்த முக்கியமான விஷயங்கள் இடம்பெற வாய்ப்பில்லை என்றும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர்கள் பிரதமர் மோடியை சந்திக்கவும் வாய்ப்பிருக்கிறது.
**
மேலும் படிக்க
**
**
[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)
**
**
[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)
**
**
[ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்](https://minnambalam.com/k/2019/06/09/53)
**
**
[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”