bசீன அதிபரைக் கண்டு மோடி அஞ்சுகிறார்!

Published On:

| By Balaji

சீன அதிபர் ஜி ஜின்பிங்கைக் கண்டு நரேந்திர மோடி அஞ்சுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஐநாவின் பாதுகாப்புக் குழுவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டையாக உள்ளது. இத்துடன் நான்காவது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. சீனாவின் நடவடிக்கை ஏமாற்றமளிப்பதாக இந்தியாவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “பலவீனமான மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கைக் கண்டு அஞ்சுகிறார். இந்தியாவுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுக்கும்போதெல்லாம் நரேந்திர மோடி வாயிலிருந்து ஒரு வார்த்தைக்கூட வருவதில்லை.

குஜராத்தில் சீன அதிபருடன் ஊஞ்சலாடுவது, டெல்லியில் அவரை கட்டி அணைத்துக்கொள்வது, சீனாவில் அவருக்கு தலை வணங்குவது. இவற்றைதான் சீன விவகாரத்தில் அரசியல் தந்திரமாக நரேந்திர மோடி பயன்படுத்துகிறார்” என்று தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜ்வாலா பேசுகையில், “மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு சீனா முட்டுக்கட்டை போடுவது பயங்கரவாதத்தை வளர்த்தெடுப்பதில் சீனாவும் ஒரு பிரிக்கமுடியாத கூட்டளியாக இருப்பதையே மீண்டும் உணர்த்துகிறது. மோடியின் வெளியுறவுக் கொள்கை எல்லாம் தொடர் பேரிடர்களாக அமைந்துவிட்டன” என்று தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share