சிறுநீரகத்தில் படிந்துவிடும் சிறிய அளவிலான கடினமான தாது அல்லது உப்புப் படிவங்கள் சிறுநீரகக் கற்களாக மாற்றமடைகின்றன. அளவில் சிறியதாக இருந்தாலும் இவை வலுவானவை. இத்தகைய படிந்திருக்கக்கூடிய தாது உப்பு கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிய கல்லாக உருவெடுக்கிறது. இந்தக் கற்கள், தாது உப்புகள் அல்லது அமில உப்புக்களால் உருவானதாகவும் இருக்கலாம். சிறுநீரகத்தில் உருவான கல், அதில் இருந்து வெளிவந்து சிறுநீர்ப் பாதையில் வரும்போது, வலி அதிகமாகவும், சிறுநீர் கழிப்பது வலி மிகுந்ததாகவும் மாறுகிறது. இந்தக் கற்கள் எங்கு இருக்கின்றன என்பதைப் பொறுத்து அதன் பாதிப்பின் அளவு இருக்கும்.
சிறுநீரகக் கற்கள் தடுக்கும் வழிகள்
ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தை, காய்கறிகள், பழங்கள் அடங்கிய உணவு முறையைப் பின்பற்ற வேண்டும்.நாள் ஒன்றுக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது சிறுநீரகக் கல் உருவாவதை மட்டும் அல்ல, சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் நோய்த் தொற்றுக்களையும் பெருமளவு குறைக்கிறது.
வலி நிவாரணி மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும்.வயிற்றுப்போக்கு, வாந்தி என டீ-ஹைட்ரேஷன் ஏற்பட்டால், உடனடியாகப் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுதல் அவசியம். திரவ உணவுகளை உட்கொள்ளுதலும் மிக அவசியம்.
�,