�
தினப் பெட்டகம் – 10 (16.11.2018)
இன்று சகிப்புத்தன்மைக்கான சர்வதேச நாள் (International Day for Tolerance)
1. ஆண்டுதோறும் நவம்பர் 16ஆம் தேதி ஐநா சபை இத்தினத்தைக் கொண்டாடுகிறது.
2. சமூகத்தில் சகிப்புத்தன்மையின் முக்கியத்துவத்தை உணர்த்துதலும், மக்களிடம் சகிப்புத்தன்மையைக் கற்பித்தலும் இந்நாளின் நோக்கம்.
3. சக மனிதர்களின் உரிமைகளையும் நம்பிக்கைகளையும் மதித்து நடக்க வேண்டும் என்பதே சகிப்புத்தன்மையின் மையக்கருத்தாகும்.
4. உலகம் முழுவதும் நிகழும் வெவ்வேறு வகையான அநியாயங்களையும், அடக்குமுறைகளையும், இனவெறித் தாக்குதல்களையும், ஒடுக்குமுறைகளையும் எப்படி நிறுத்தலாம் என்பது குறித்த விவாதங்களும் உரையாடல்களும் பல்வேறு இடங்களில் நிகழும்.
5. 1996ஆம் ஆண்டில், முதன்முதலாக இத்தினம் கொண்டாடப்பட்டது.
6. சகிப்புத்தன்மையின் மிகச் சுருக்கமான விளக்கம்: பிறரின் நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் புரிந்துகொண்டு மதிப்பது; அவற்றைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.
7. உலகம் கண்ட மிகக் கொடூரமான வெறுப்புச் செயல்களுள் முக்கியமானது, மனித அடிமை வணிகம் (slavery trade).
8. ஆப்பிரிக்காவில் இருந்து மேற்கு அரைக்கோளத்திற்கு மட்டும் ஏறத்தாழ 9,566,000 மனிதர்கள் அடிமைகளாக வணிகம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
9. Xenophobia என்பது அந்நியர்கள் அல்லது வெளிநாட்டவர் மீது ஏற்படும் பயம் அல்லது வெறுப்புணர்வு.
10. சகிப்புத்தன்மையின் முக்கியத்துவத்தை உலகம் முழுவதும் கொண்டுசென்ற மனிதர்களில் மிக முக்கியமானவர்கள், மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங், ஆப்ரஹாம் லிங்கன்.
**- ஆஸிஃபா**�,