விருந்தினர் ஸ்பெஷல்!
அழைப்பிதழோ, அவசர அழைப்போ… இப்போதெல்லாம் ஸ்டார்ட்போன் பரிவர்த்தனையிலேயே அனைத்தும் அரங்கேறிவிடுகின்றன. ஆனாலும், நேரில் பார்க்கிற உணர்வுடன் இருக்கிறவர்களின் திடீர் வருகை நம்மைத் திக்குமுக்காடச் செய்துவிடும். அப்படிப்பட்டவர்களுடன் உரையாடும்போது உதவும் இந்த மசாலா வேர்க்கடலை.
**என்ன தேவை?**
வேர்க்கடலை – ஒரு கப்
மிளகாய்த் தூள்- கால் டீஸ்பூன்
எண்ணெய் – டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை
கடலை மாவு – 2 டீஸ்பூன்
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையைப் போட்டு, ஒரு கை தண்ணீர் தெளித்துப் பிசிறி வடிகட்டவும். உப்பு, எண்ணெய், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து பிசிறினாற்போலக் கலக்கவும். கலவையை பேப்பர் தட்டில் பரவலாக வைத்து மைக்ரோவேவ் அவன் உள்ளே 2 நிமிடம் வைத்து எடுத்து, கலந்து ஆறவிட்டால்… மசாலா வேர்க்கடலை தயார்!
குறிப்பு: ‘மைக்ரோவேவ் அவன்’ இல்லாதவர்கள் வேர்க்கடலை கலவையை எண்ணெயில் பொரித்துச் சாப்பிடலாம்.
**என்ன பலன்?**
ஏழைகளின் புரதம் என்று சொல்லப்படும் வேர்க்கடலை நார்ச்சத்து மிக்கது. இதில் 13 வைட்டமின்களும் 26 தாதுப் பொருட்களும் உள்ளன. வேர்க்கடலையில் உடம்புக்குத் தேவையான நல்ல கொழுப்பு உள்ளது. 30 விதமான ஊட்டச்சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன.
நேரமிருக்கும்போது செய்து வைத்துக்கொண்டால், விருந்தினர் வருகையின்போது உதவும்.
[நேற்றைய ரெசிப்பி: பாசிப்பருப்பு பர்ஃபி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/2)
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
**
[வாக்கு கணிப்பு: பாஜகவுக்கு வெற்றியா?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/50)
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)
**
.
.�,”