bகிச்சன் கீர்த்தனா: சோயா பீன்ஸ் மசாலா

Published On:

| By Balaji

பேச்சுலர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் இரவு உணவின் சுவையைக்கூட்ட எதைச் செய்து சாப்பிடலாம் என்று யோசிப்பது வழக்கம். இந்த சோயா பீன்ஸ் மசாலா அதற்கு உதவும். ஆரோக்கியமான சோயா பீன்ஸ் மசாலாவை எளிதில் செய்யலாம். சோயா பீன்ஸில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

**என்ன தேவை?**

சோயா பீன்ஸ் – அரை கப்

தக்காளி – 5

கரம் மசாலாத்தூள் – 2 டீஸ்பூன்

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

சோயா பீன்ஸை நன்றாகக் கழுவிக்கொள்ளவும். பிறகு 2 கப் தண்ணீரில் 5 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் ஏழு விசில் வரும்வரை வேகவைத்துக்கொள்ளவும். பின்னர் அதே குக்கரில் தக்காளியைச் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும்வரை வேகவைத்துக்கொள்ளவும். அதன் தோலை உரித்து நன்கு ஆறவைத்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அதில் அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்துக் கைவிடாமல் வதக்கவும். பின்னர் வேகவைத்த சோயா பீன்ஸ், தேவையான அளவு உப்பு மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, எண்ணெய் மிதக்கும் வரை (சுமார் 10 நிமிடங்கள்) கொதித்ததும் இறக்கவும். சப்பாத்தியோடு பரிமாறவும்.

[நேற்றைய ரெசிப்பி: சின்ன வெங்காயம் துவையல்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/03/10/4)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share