bகிச்சன் கீர்த்தனா: கோவைக்காய் சாதம்!

public

முன்னாடியெல்லாம் குப்பை பகுதியிலும், கிராமப்புறங்களில் வேலியிலும் படர்ந்து இருக்கும் கோவைக்காயை யாரும் கண்டுகொள்ள மாட்டாங்க. இப்ப பாருங்க, அது எவ்வளவு விலை விக்குதுனு காய்கறி கடையில சொல்றதைக் கேட்டிருப்போம். அப்படி என்னங்க அந்த கோவைக்காயில் ஸ்பெஷல்னு கேட்கலாம். சர்க்கரை வியாதி உள்ளவங்களுக்குச் சிறந்த மருந்துன்னா இந்த கோவைக்காய்தான். இதுல ஃப்ரை, கூட்டு இப்படிதான் சாப்பிட்டிருப்பீங்க. இதுல, இப்ப கோவைக்காய் சாதம் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

கோவைக்காய் – 100 கிராம்

வடித்த சாதம் – 1 கப்

வெங்காயம் – 1

தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1 டீஸ்பூன்

எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு,

மிளகாய்த்தூள் – 1 டீ ஸ்பூன் (காரத்துக்கேற்ப)

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் வெங்காயம், கோவைக்காயைப் பொடியாக நறுக்கிவைக்கவும்.

பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதன்பின், வெங்காயம் சற்று வதங்கியதும் கோவைக்காயை போட்டு வதக்கவும். அடுத்து அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் மூடி வைத்து வேக விடவும்.

பின்னர் அதனுடன், கோவைக்காய் நன்றாக வெந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் எலுமிச்சைச் சாறு விட்டுக் கலக்கி இறக்கவும். இதனுடன் வடித்த சாதம் சேர்த்துக் கலந்து பரிமாறவும். இப்போது சுவையான கோவைக்காய் சாதம் ரெடி.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *