சிவகார்த்திகேயன் தயாரித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான பாத்திரத்தில் நடித்த கனா படத்தின் தெலுங்கு ரீமேக் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா, சத்யராஜ், சிவகார்த்திகேயன், தர்சன் நடிப்பில் உருவான கனா திரைப்படம் பெண்கள் விளையாட்டில் ஈடுபடுவதையும் கனவு காண்பதையும் ஊக்குவிக்கும் படமாக அமைந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றது. கிரிக்கேட் வீராங்கனையாக ஐஸ்வர்யா நடித்த இப்படம் சென்ற ஆண்டின் வெற்றிப்படமாகவும் அமைந்தது. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தில் பாடலாசிரியர், நடிகர் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமானார். திபு நினான் தாமஸ் என்பவர் இசையமைத்துள்ளார்.
கனா திரைப்படம் தெலுங்கில் கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், கனா தெலுங்கு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சத்யராஜ் நடித்த பாத்திரத்தில் ராஜேந்திர பிரசாத், தர்சன் நடித்த பாத்திரத்தில் கார்த்திக் ராஜு ஆகியோர் நடித்திருக்கின்றனர். பீமனேனி ஸ்ரீநிவாஸ் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார். கே.ஏ. வல்லபா இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
சன் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயன் தங்கையாக தற்போது நடித்து வருகிறார்.
.
.[கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி மோஷன் போஸ்டர்](https://www.youtube.com/watch?v=4310bMyP-9E&feature=youtu.be)
**
மேலும் படிக்க
**
.
.
**
[பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/05/24/58)
**
.
**
[திமுக மக்களவைக் குழுத் தலைவர் யார்?](https://minnambalam.com/k/2019/05/24/63)
**
.
. **
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
**
[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)
**
.
.�,”