Bகஜோலுக்கு மெழுகுச் சிலை!

Published On:

| By Balaji

பாலிவுட் நடிகை கஜோலுக்கு சிங்கப்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை நிறுவப்படவுள்ளது.

உலகளவில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களின் மெழுகுச் சிலைகளை உருவாக்கி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுவருகிறது. இந்த முயற்சியினை லண்டனைச் சேர்ந்த பிரபல அருங்காட்சியகமான மேடம் டுசாட் செய்துவருகிறது. இதன் கிளைகள் பல்வேறு நாடுகளில் உள்ளன. சிங்கப்பூரிலும் இந்த அருங்காட்சியகத்தின் கிளை உள்ளது.

பாலிவுட்டின் பிரபல நடிகையான கஜோலுக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியத்தில் மெழுகு சிலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக இந்த குழுவைச் சேர்ந்தவர்கள், மும்பை வந்து கஜோலின் முகத்தோற்றம், கண், முடி உள்ளிட்டவைகளை அளவிட்டுச் சென்றுள்ளனர்.

மெழுகுச் சிலை அமைப்பது குறித்து தெரிவித்த கஜோல், “என் மெழுகுச் சிலையை காண ஆவலாக உள்ளேன். என் சிலையை உருவாக்கத் தேவையான அளவீடுகளைச் சுமார் 4 மணிநேரம் செலவிட்டு எடுத்துச் சென்றனர். சிலை உருவாக்கப் பணிகள் முடிந்து, சிங்கப்பூரில் என் சிலை வைக்கப்படும் நாளை எண்ணிக் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த சிலை அமைப்பது குறித்து சிங்கப்பூர் அருங்காட்சியத்தின் தலைமை அதிகாரி கிரைக் கன்னார், “பாலிவுட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களில் கஜோல் முக்கியமானவர். அவருக்கு மெழுகுச் சிலை அமைப்பதில் பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான சன்னி லியோனுக்கு டெல்லியில் மெழுகுச் சிலை நிறுவ அளவெடுத்துச் சென்றனர். இதற்கான பணிகள் நடந்துவருகின்றன. மேலும், அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், சச்சின் எனப் பல பிரபலங்களின் சிலை இங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share