கஜா புயலின் காரணமாக தமிழகத்தில் உப்பளத் தொழில் பாதிப்படைந்துள்ளதால் இந்தாண்டு உப்பு உற்பத்தி கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் உப்பளத் தொழிலில் முன்னணி வகிக்கும் வேதாரண்யம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் 6 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்குப் பெருமளவில் உப்பு அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வேதாரண்யம் கஜா புயலின் காரணமாகப் பலத்த சேதமடைந்திருப்பதால் உப்பு உற்பத்தி பெருமளவில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புயலின் காரணமாக சென்ற வருடம் ஏற்றுமதி செய்யப்பட்டது போக மீதமிருந்த 1.75 லட்சம் டன் உப்பு புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் ஏற்பட்ட இப்பாதிப்புகளைச் சரி செய்வதற்கான முதலீட்டுக்கு போதுமான பொருளாதாரம் உற்பத்தியாளர்களிடம் இல்லை. பிப்ரவரியில் தொடங்கப்பட வேண்டிய உற்பத்தி தாமதமானால் 2019ஆம் ஆண்டுக்கான உப்பு உற்பத்தியில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படும். கஜா புயல் பாதிப்பால் இந்தத் தொழிலை சார்ந்திருக்கும் 25,000 தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.�,