bகச்சா எண்ணெய்: எச்சரிக்கும் இந்தியா!

Published On:

| By Balaji

கச்சா எண்ணெய் விலையைக் குறைக்காவிடில், தேவை குறைக்கப்படும் என்று எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்புக்கு இந்தியாவின் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் உற்பத்தி நாடுகள் கச்சா எண்ணெய் விலையைக் குறைக்காவிட்டால், கொள்முதலைக் குறைக்க நேரிடும் என்று இந்தியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷனின் தலைவரான சஞ்சிவ் சிங் ‘மிண்ட்’ ஊடகத்திடம் பேசுகையில் தெரிவித்துள்ளார். கடந்த ஒன்றரை மாதங்களாக எண்ணெய் விலை உயர்ந்துகொண்டே போகிறது. இதே வேகத்தில் விலை உயர்ந்தால், எலெக்ட்ரிக் வாகனங்கள், எரிவாயு எனத் தெற்காசிய நாடுகள் மாற்று வழிகளைக் கண்டறியும். இதன்படி 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டின் தினசரி எண்ணெய் பயன்பாட்டில் ஒரு மில்லியன் பேரல்கள் குறையும் என்று சஞ்சிவ் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 விழுக்காட்டை (160 கோடி பேரல்கள்) எண்ணெய் ஏற்றுமதி நாடுகளிடம் (ஒபெக் நாடுகள்) இருந்துதான் இறக்குமதி செய்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாலும், உற்பத்தி குறைக்கப்படுவதாலும், இந்தியா தனது விமர்சனங்களைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. மேலும், எண்ணெய் சில்லறை விற்பனையில் மிகப்பெரிய நாடாக இருக்கும் இந்தியா, இயற்கை எரிவாயு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், எலெக்ட்ரிக் வாகனங்கள் என மாற்று வழிகளுக்கு மாறிவருகிறது. இந்தியா போன்ற முக்கிய வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஒபெக் நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த எச்சரிக்கைகள் குறித்து எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு விழிப்புணர்வுடன் இருப்பதாக சஞ்சிவ் சிங் தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment