வறுமையை ஒழித்திட உயர் விகித வளர்ச்சி தேவை என்றும் வளர்ச்சியின் நன்மைகள் ஏழைகளைச் சென்று சேர்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
நவம்பர் 15ஆம் தேதி வங்கியாளர் மாநாடு ஒன்றில் பேசிய அருண் ஜேட்லி, ”இந்தியாவைப் போலவே அனைத்து உலக நாடுகளும் தங்களது பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும். அதிகப்படியான மக்கள் வறுமையின் பிடியில் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நாம் மீட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தித் தர வேண்டும். ஆனால் இத்தகைய ஆபத்தான வளர்ச்சியில் ஒரு சிலர் மட்டுமே பயன் பெறுவதை நாம் உணர வேண்டும்.
வளர்ச்சியின் தாக்கம் நிச்சயமாக ஏற்படும். ஆனால் அதற்குக் கொஞ்சம் காலம் தேவைப்படும். வளர்ச்சியடைந்த சமூகம் அதனை ஏற்றுக்கொள்ளாது. ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் 33 கோடி மக்கள் வங்கி கணக்குகளைப் பெற்றுவிட்டனர். 14.1 கோடி மக்கள் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் மூலம் 6௦ வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நாட்டின் பொருளாதாரத்தை ஒழுங்கு படுத்தவே பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன” என்று தெரிவித்தார்.�,