bஎழுவர் விடுதலை: குழப்பும் காங்கிரஸ்!

public

ராஜீவ் காந்தியின் மகனும் காங்கிரஸின் தலைவருமான ராகுல் காந்தி பல்வேறு சமயங்களில், ”ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை எங்கள் குடும்பம் மன்னித்துவிட்டது. அவர்களை விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று கூறியுள்ளார். தற்போது குற்றம் சுமத்தப்பட்ட எழுவரை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எழுவரும் கடந்த 27 வருடங்களாக சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளனின் நன்னடத்தையும், அவரை விடுதலை செய்ய அவரது தாயாரின் போராட்டமும் தேசிய அளவில் கவனிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகிய மூவர் கொண்ட அமர்வு, குற்றம் சுமத்தப்பட்ட 7 பேர் குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உரிமையுண்டு என்றும் அவர்கள் ஆளுநருக்கு விடுதலை குறித்து பரிந்துரை செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில், ‘ராஜீவ் கொலை வழக்கில் அதிமுக மற்றும் பாஜக அரசியல் செய்கின்றன’ என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜீவாலா நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது. “ துரதிருஷ்டவசமாக பாஜக தீவிரவாதத்தையும் ஒரு பாகுபாட்டுடைய கண்ணோட்டத்தில் பார்க்கிறது.” என்றார். மேலும் அவர் பகிரங்கமாகவே, “ பிஜேபியும், பிஜேபியின் கூட்டாளியான அதிமுகவும், பிஜேபியால் நியமிக்கப்பட்ட ஆளுநரும், இந்த கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கில் செயல்பட்டுவருவது உண்மைதானே?” என்றார்.

அடுத்து அதிமுக, பாஜக அரசாங்கங்கள் மீதும் அடுக்கடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தியவர், “ இந்த அரசு செய்வது என்ன?. அரசின் வேலை தீவிரவாதிகளை பிடிப்பதா அல்லது காப்பாற்றுவதா?. இது தான் இந்த அரசின் கொள்கையா?. தீவிரவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களை தற்போது நாம் விடுதலை செய்யப் போகிறோமா?” என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

பிஜேபியிடமிருந்து இதற்கு எதிர்வினைகள் எதுவும் இல்லை எனினும், ஏற்கனவே மத்திய அரசு இந்த எழுவர் விடுதலை செய்யப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது கவனிக்கப்படவேண்டியது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *