உளவுத் துறை ஐ.ஜி.,யாக நியமனம் செய்யப்பட்ட டேவிட்சன் ஆசிர்வாதம் காவலர் நல வாழ்வு ஐ.ஜி.,யாக மாற்றம் செய்யப்பட்டார்.
தமிழக காவல் துறையில் உளவுத்துறை ஐ.ஜி.,யாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியின்போது, கடந்த 12ஆம் தேதி டேவிட்சன் ஆசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று திடீரென உளவுத்துறை ஐ.ஜி.,யாக நியமனம் செய்யப்பட்டிருந்த அவர் அதிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு, காவலர் நலவாழ்வு ஐ.ஜி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் 11 நாட்கள் மட்டுமே உளவுத்துறை ஐ.ஜி.,யாக பதவிவகித்தது குறிப்பிடத்தக்கது.�,