bஇயற்கையை நேசிக்கும் வீகன் உணவு முறை!

Published On:

| By Balaji

தினப் பெட்டகம் – 10 (01.11.2018)

“வீகன் உணவு முறை” உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. இந்தியாவிலும் பல இடங்களில் இந்த உணவு முறையைப் பின்பற்றி வருகின்றனர். இன்று உலக வீகன் தினம்!

1. வீகன் உணவு முறையைப் பின்பற்றும் ஒருவர், ஒரு வருடத்திற்குக் குறைந்தது 30 மிருகங்களின் வாழ்வைக் காப்பாற்றுகிறார்.

2. வீகனாக இருப்பதால், நம் கார்பன் தடம் (carbon footprint) பாதியாகக் குறைகிறது.

3. ஒவ்வொரு நாளும், இறைச்சித் தொழில்துறையில் மட்டும், மூன்றில் ஒரு பங்கு குடிநீர் செலவழிக்கப்படுகிறது. உலகில் ஏறத்தாழ 4 பில்லியன் மக்களுக்குக் குடிப்பதற்கு நீர் இல்லாத சூழலில், வீகன் உணவு முறையைப் பின்பற்றுபவர்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 1,100 காலன் தண்ணீரை மிச்சப்படுத்துகின்றனர்.

4. “Ethical Vegans” என்பவர்கள் உணவுகளிலிருந்து மட்டுமல்லாமல், வேறு எந்த ஒரு விலங்கிடமிருந்து கிடைக்கும் பொருளையும் பயன்படுத்துவது கிடையாது. அதாவது, பவளம், தோல், பறவை இறகுகள், முத்து, பட்டு எனப் பல பொருட்கள் இப்பட்டியலில் அடங்கும்.

5. உண்ணும் உணவால் நச்சு பாதிப்பு நிகழ்வதில் ஏறத்தாழ 80% கெட்டுப்போன இறைச்சியை உட்கொள்வதால் ஏற்படுகிறதாம்.

6. மனிதர்களால் நிகழும் மாசுபாட்டில் கிட்டத்தட்ட 20% இறைச்சி தொழில் துறையில் இருந்து வருகிறது.

7. ‘வீகன்’ என்ற சொல் முதன்முதலில் 1994ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது.

8. இங்கிலாந்தில் மட்டும், அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீகன் உணவு முறையைப் பின்பற்றுகின்றனர்.

9. மிருகங்களுக்கு, குறிப்பாக இறைச்சிக்காக வளர்க்கப்படும் மிருகங்களுக்குப் போடப்படும் தானியங்கள், உலகில் 1.3 பில்லியன் மக்களுக்கு உணவாக வழங்கப்படலாம்.

10. வீகன் உணவு முறையைப் பின்பற்றுபவர்கள், ஒரு நாளைக்கு ஏறத்தாழ 45 பவுண்ட் தானியங்களை மிச்சப்படுத்துகின்றனர்.

**- ஆஸிஃபா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share