Bஅரசியல் பேசும் ஜெயம் ரவி

Published On:

| By Balaji

நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோமாளி’ திரைப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றின், வீடியோ புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.

ஒன்பது விதமான மாறுபட்ட தோற்றங்களில் ஜெயம் ரவி இருக்கும், ‘கோமாளி’ திரைப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நகைச்சுவையாய் விளக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ஆங்கிலம் படிக்கட்டும், ஹிந்தியும் பேசட்டும், தாய் மொழி தமிழ் மட்டும் தலைமை தாங்கட்டும். எங்க இருக்கேன், எனக்கு என்ன ஆச்சி, இப்போ இந்தியாவுல யாரோட ஆட்சி?” என்று அமைந்த பாடல் வரிகளும் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மோடி, மோடி என்று ஏளனமாய் சிரிப்பது போன்றும் அந்த பாடல் காட்சிகள் அமைந்துள்ளது.

இந்தி திணிப்பு, மக்களவைத் தேர்தல் முடிவுகள் என்று சமகால சமூக பிரச்சனைகளைப் பகடி செய்யும் விதமாக அமைந்துள்ள இந்த வீடியோ காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புரொமோ வீடியோவைத் தொடர்ந்து, முழு பாடலும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். சம்யுக்தா ஹெக்டே, கவிதா ரதேஷ்யம், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை, வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா-ஆதி இசையமைத்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**

**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**

**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**

**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share