b‘அந்த’ தேதியில் வெளியாகிறதா 2.O டீசர்?

Published On:

| By Balaji

ரஜினி காந்த் நடிக்கும் 2.O படத்தின் டீசர் வெளியாகவுள்ள தேதி குறித்த சூசக தகவல் ரசூல் பூக்குட்டி மூலமாக தற்போது கிடைத்துள்ளது.

நடிகர் ரஜினி காந்த்- இயக்குநர் ஷங்கர் காம்பினேஷனில் வெளியான **‘எந்திரன்’** படத்தின் இரண்டாவது பாகமாக 2.O என்னும் படம் உருவாகி வருகிறது. ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் என பலர் நடிக்கும் இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் மிகவும் பிரமாண்டமாக உருவாகிவருகிறது. இப்படத்தின் பட வேலைகள் நிறைவு பெறாததால் வெளியீடும் தள்ளிக்கொண்டே போனது.

பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, ரஜினியின் பிறந்தநாள் , தமிழ்ப் புத்தாண்டு, திரும்பவும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என இந்தப்படத்தின் வெளியீடு குறித்த தேதிகளை ரசிகர்களாகவே தீர்மானித்துக்கொண்டு ஒவ்வொரு தேதியாக எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் இந்தப் படம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம்தேதி வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் தெரிவித்தார். இதனால் ஒருவழியாக இந்தப்படத்தின் வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, இப்படத்தின் டீசர் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி இருந்துவந்தது. இந்நிலையில், இப்படத்தின் ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டியின் [ட்விட்டர்](https://twitter.com/resulp/status/1022502729812508672) பக்கத்தில்

ஜூலை 26ஆம் தேதி, “இதன் டீசர் எப்போது வெளியாகிறது? ஏதாவது க்ளூ கொடுங்களேன்” என ஒருவர் கேட்டார். இதற்கு “நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது எப்போது?” என பதில் கேள்வி கேட்டுள்ளார் ரசூல் பூக்குட்டி.

இதனால் இப்படத்தின் டீசர் சுதந்திர தினமான **ஆகஸ்ட் 15**ஆம் தேதி வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share