bஅதிமுக ஆட்சி தானாக கவிழும்: ஸ்டாலின்

Published On:

| By Balaji

ஆட்சியைக் கவிழ்க்க வேண்டியதில்லை, அது தானாகவே கவிழும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு நாளை இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், 4 தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோர் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின், அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து, பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்ததால் இங்கு இடைத் தேர்தல் வந்துள்ளது. ஆட்சியைக் கவிழ்க்கப் பார்த்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுதான் அவருடைய பதவி பறிக்கப்பட்டது. ஆனால் ஆளுநரிடம் செந்தில் பாலாஜி கொடுத்த மனு, முதலமைச்சர் ஊழல் செய்கிறார், லஞ்சம் வாங்குகிறார். எனவே அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்பதுதான். அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் அவர்களிடம் முதல்வருக்குரிய இலாகாக்கள் மட்டும்தான் இருக்கும். கூடுதலாக போலீஸ் இலாகாவை வைத்திருப்பர். அமைச்சர்களை கண்காணிப்பதுதான் முதல்வரின் வேலை.

ஆனால், எடப்பாடி பழனிசாமி போலீஸ் இலாகாவோடு பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறைகளையும் தன்வசம் வைத்துக்கொண்டார். ஏனெனில் இதில்தான் லஞ்சம் வாங்க முடியும், கமிஷன் அடிக்க முடியும். அப்படித்தான் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்” என்று விமர்சித்தார்.

ஸ்டாலின் 24 மணி நேரமும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்கிறார் என்றும் கனவு காணுகிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் இது கனவு அல்ல, வரும் 23ஆம் தேதி நடைபெறப் போகிறது. ஆட்சியைக் கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை, தானாகவே கவிழப் போகிறது. அதற்கு இந்த இடைத் தேர்தல் பயன்படப் போகிறது என்றவர், “வரும் 23ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சிக்கட்டிலில் திமுகதான் அமரப்போகிறது. எப்படியென்றால் தற்போது திமுக கூட்டணிக்கு 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 22 தொகுதிகளிலும் திமுக வென்றால் 119 எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சியைப் பிடிப்போம்.அப்போது உங்களுடைய குறைகளை நிறைவேற்றித் தருவோம்” என்றும் உறுதியளித்தார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)

**

.

**

[ரித்தீஷ் மனைவி மீது புகார்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/51)

**

.

**

[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)

**

.

**

[ரவீந்திரநாத் எம்பி: கல்வெட்டில் பெயர் மறைப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/56)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share