அதிமுகவின் அனைத்து அணிகளும் இணைய வேண்டும் என்கிற தம்பிதுரையின் கருத்தை வரவேற்கிறேன் என்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அணிகள் இணைவைத் தொடர்ந்து, தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த ஆட்சியை அகற்றாமல் ஓயமாட்டேன் என்றும், ஒரு வாரத்திற்குள் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்று கூறி தினகரன் கூறி வருகிறார். ஆனால் அமைச்சர்களோ, சசிகலா, தினகரன் குடும்பத்தை இனி ஒருபோதும் கட்சிக்குள் சேர்க்க மாட்டோம்” என்று அதிரடியாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவை ஒருபுறமிருக்க மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையோ,” அதிமுகவின் அனைத்து அணிகளும் விரைவில் இணையும் என்று கூறி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் தொடர்ந்து ஆட்சியை அகற்றுவோம் என்று கூறிவந்த தினகரன், சசிகலா பரோலில் வந்துசென்ற பிறகு தனது அதிரடி பேச்சுக்களை சற்று குறைத்துக் கொண்டுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் (அக்டோபர் 15) செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்,” பதவி ஆசைக்காகத்தான் பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். அவர் செய்த துரோகத்தை அதிமுக தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். மக்கள் நலனில் முதல்வருக்கு அக்கரையில்லை, மக்கள் நலனை விட எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பதிலேயே கவனமாக உள்ளார்” என்றார்.
அனைத்து அணிகளும் இணைய வேண்டும் என்ற தம்பிதுரையின் கருத்தை வரவேற்பதாகவும், சசிகலா தலைமையை ஏற்றுக்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஏற்க தயாராக உள்ளோம்” என்றும் தெரிவித்துள்ளார்.
�,”