gடாப் ட்ரெண்டிங்கில் அயோத்தி தீர்ப்பு!

Published On:

| By Balaji

அயோத்தி தீர்ப்பு எதிரொலியாக ட்விட்டரில் உலகளவில் அயோத்தி தொடர்பான ஹேஷ்டாக்குகள் ட்ரெண்டாகியுள்ளன.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 9) தீர்ப்பு வழங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம், என்றும் முஸ்லீம்களுக்கு அயோத்தியிலேயே மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வந்துள்ளது.

இந்த தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1.2 லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தீர்ப்பினை அனைத்து தரப்பினரும் மதித்து எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கும் இடம் கொடுக்காமல், தமிழ்நாட்டை தொடர்ந்து அமைதிப்பூங்காவாக திகழச் செய்ய வேண்டும். இந்தியாவிற்கே தமிழகம் முன்னுதாரணமாக இருப்பதற்கு அனைத்து மதத் தலைவர்கள், அனைத்து கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், #AYODHYAVERDICT என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. அதுபோன்று #AyodhyaJudgment, #RamMandir, #AyodhyaHearing #JaiShriRam #RamMandir, #AyodhyaJudgment, #AyodhyaHearing #babriMasjid #sunniwaqf #temple என ட்விட்டர் முழுவதும் அயோத்தி தொடர்பான ஹேஷ்டாக்குகள் தான் ட்ரெண்டாகி வருகின்றன. குறிப்பாக உலக அளவில் முதல் 5 இடத்தில் அயோத்தி வழக்குகள் மட்டுமே ட்ரெண்டிங்கள் உள்ளன.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share