கிச்சன் கீர்த்தனா: நாட்டு அவரைக்காய் பொரித்தக் கூட்டு!

Published On:

| By admin

பாரம்பரிய சுவை மாறாமல், சத்துகள் குறையாமல் அதேநேரம் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றாற்போல சமைக்க பெஸ்ட் சாய்ஸ், இந்த நாட்டு அவரைக்காய் பொரித்தக் கூட்டு. நார்ச்சத்தும் புரதச்சத்தும் மிகுந்து காணப்படும் இதை, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

**என்ன தேவை?**
நறுக்கிய நாட்டு அவரைக்காய் – ஒரு கப்
பாசிப்பருப்பு – 50 கிராம்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

**வறுத்து அரைக்க**
உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
தேங்காய்த்துருவல் – ஒரு கைப்பிடி
சீரகம் – கால் டேபிள்ஸ்பூன்
**தாளிக்க**
கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயம் – தலா கால் டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு

**எப்படிச் செய்வது?**
ஒரு குக்கரில் அவரைக்காய், பாசிப்பருப்பு, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து இரண்டு விசில்விட்டு எடுக்கவும். பிறகு அதில் வறுத்து அரைத்த பொருள்களைச் சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதிவந்தவுடன், தாளிக்க கொடுத்துள்ள பொருள்களைக்கொண்டு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

[நேற்றைய ரெசிபி – பச்சைப்பயறு பாயசம்!](https://minnambalam.com/public/2022/06/07/1/green-gram-payasam)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share