Jரிலாக்ஸ் டைம்: அவல் உருண்டை!

Published On:

| By Balaji

bகாலைக்கும் மதியத்துக்கும் இடைப்பட்ட நேரத்தில் பசிக்கிறது என்று கேட்டு வருபவர்களிடம் தட்டு நிறைய தரமான தின்பண்டங்களை வைத்துக்கொடுத்தாலும் சாப்பிடலாமா, வேண்டாமா என்று யோசிப்பார்கள். அந்தத் தின்பண்டமே எளிதாக எடுத்துச்சாப்பிடுகிற வகையில் இருந்தால் அள்ளிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட தின்பண்டமே சத்துகள் நிறைந்த இந்த அவல் உருண்டை.

**எப்படிச் செய்வது?**

ஒரு கப் அவலை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் அரைத்து மாவாக்கிக்கொள்ளவும். கால் கப் கோதுமை மாவு, இரண்டு டேபிள்ஸ்பூன் ரவையை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். வாய் அகன்ற பாத்திரத்தில் மூன்றையும் சேர்த்து நாட்டுச்சர்க்கரை அரை கப், ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன், உடைத்த வறுத்த முந்திரி சிலவற்றை சேர்த்து, கால் கப் உருக்கிய நெய் விட்டு பிசிறி, கெட்டியான உருண்டைகளாகப் பிடிக்கவும்.

**சிறப்பு**

கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்படும் அவலில் ஊட்டச்சத்துகள் ஏராளம். இதில் வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், கலோரி, குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. உடலுக்குப் புத்துணர்ச்சி தரும்; ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share