Nரிலாக்ஸ் டைம் : அவல் ஸ்நாக்ஸ்!

Published On:

| By Balaji

தினமும் காலையில் சுறுசுறுப்பாக வேலையைத் தொடங்கும் பலர் சிறிது நேரத்திலேயே உடலிலுள்ள ஆற்றல் எல்லாம் தீர்ந்ததுபோல் சோர்ந்துவிடுவார்கள். ஆற்றலை இழப்பது என்பது நம்முடைய அன்றாட வேலைகளைப் பாதித்து, உற்பத்தித் திறனையும் குறைக்கும். அப்படிப்பட்ட நிலையில் இந்த அவல் ஸ்நாக்ஸைச் சாப்பிடுங்கள். இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள்.

**எப்படிச் செய்வது?**

ஒரு கப் சிவப்பரிசி கெட்டி அவலை இரண்டு நிமிடங்கள் ஊறவைத்து, களைந்து வடிகட்டவும். இதனுடன் கால் கப் தேங்காய்த் துருவல், ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூள், தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து சுவைக்கலாம்.

**சிறப்பு**

சிவப்பரிசி கெட்டி அவலிலிருக்கும் நார்ச்சத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்வகிக்கும் திறன் பெற்றது என்பதால் உடலிலுள்ள சர்க்கரையின் அளவு சீராகும். ஜீரணப் பிரச்சினைகளை நீக்கும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share