கிருஷ்ணருக்குப் பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று. கிருஷ்ண ஜெயந்திக்கு நைவேத்தியம் படைக்க அவல் லட்டு செய்வது வழக்கம். அனைவருக்கும் பிடித்த இந்த லட்டு, ஆரோக்கியமானது மட்டுமல்ல; ரிலாக்ஸ் டைமுக்கும் ஏற்றது.
**எப்படிச் செய்வது?**
ஒரு கப் அவல், அரை கப் பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வெறுமனே வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு ஆறு முந்திரி, ஆறு காய்ந்த திராட்சையைப் போட்டு வறுத்து வைக்கவும். வாணலியில் சிறிது நெய் விட்டு இரண்டு கப் தேங்காய்த் துருவலை போட்டு வறுத்து பொடித்துக் கொள்ளவும். ஒரு கப் சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு நெய் சேர்த்து சூடானதும் எல்லாவற்றையும் போட்டு சிறிதளவு ஏலப்பொடி, அரை கப் பால் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுகளைப் பிடித்து வைக்கவும்.
**சிறப்பு**
உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியைத் தரும். நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் உதவும்.
�,