Dரிலாக்ஸ் டைம்: அவல் கேசரி!

Published On:

| By Balaji

அவசரமான சூழலில் பசியைப் போக்கக் கூடிய அவல் சமைக்காமல் அப்படியே சாப்பிடக்கூடியது. அப்படிப்பட்ட அவல் கொண்டு ரிலாக்ஸ் டைமில் சுவையான இந்த அவல் கேசரி செய்து நாள் முழுக்க புத்துணர்ச்சி பெறலாம்.

**எப்படி செய்வது?**

100 கிராம் அவலை வெறும் வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு வறுத்து மிக்ஸியில் ரவை போல் பொடித்துக்கொள்ளவும். ஒரு பங்கு பொடித்த அவல் ரவைக்கு இரு பங்கு தண்ணீர்விட்டு தண்ணீர் கொதித்தவுடனலொரு சிட்டிகை கேசரி பவுடர், அவல் ரவையைக் கொட்டி கிளறி வேகவிடவும். ரவை நன்கு வெந்து உதிரியாக வந்தவுடன் 200 கிராம் சர்க்கரை சேர்க்கவும். நன்கு வெந்து கெட்டியானதும் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு 20, ஏலக்காய்த்தூள் சிறிதளவு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

**சிறப்பு**

இதில் வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், கலோரி, குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியமானது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share