hஅட்லீயின் அடுத்த படம் ‘சங்கி’ இல்லையா?

Published On:

| By Balaji

பிகில் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அட்லீ என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வி அதிகமாக கேட்கப்பட்டது. அதற்குக் காரணம், அடுத்து அவர் ஷாருக் கானுடன் இணையப்போகிறார் என்று வெளியான தகவல். பிகில் திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு, அட்லீயை குடும்ப சகிதமாக அழைத்துப் பேசிய ஷாருக் கான், அவரது கதை பிடித்துவிட்டதாகக் கூறியதாகவும், அதில் நடிக்க சம்மதம் கூறியதாகவும் வெளியான தகவல்கள் அட்லீயின் மீதான பார்வையை அதிகமாக்கின.

தமிழ் படங்களை இயக்கியதன் மூலம் இந்தித் திரையுலகில் வேலை செய்துகொண்டிருக்கும் பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் வரிசையில் அட்லீயும் இணைந்துவிடுவார் என்று பேசப்பட்ட நிலையில், தமிழிலேயே அட்லீ இன்னொரு கதையையும் தயார் செய்கிறார் என்ற தகவலும் வெளியானது. இதனால் குழப்பமடைந்த ரசிகர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில், அட்லீயின் ட்விட்டர் கணக்கில் ஒரு தகவல் மாற்றப்பட்டிருக்கிறது.

அட்லீயின் ட்விட்டர் கணக்கில், ‘ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களின் இயக்குநர்’ என்ற அறிமுகம் இத்தனை நாட்களாக இருந்தது. ஆனால், தற்போது அதில் ‘A5′ என்ற பெயரை மட்டும் இப்போது அட்லீ சேர்த்திருக்கிறார். இது அட்லீயின் ஐந்தாவது திரைப்படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டன என்பதைக் குறிப்பது தெரிந்தாலும், எந்த ஹீரோவுடன் அட்லீ இணைகிறார் என்பது தெரியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

அட்லீக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது, “அட்லீயின் ஐந்தாவது படம் ஹீரோவுக்கான கதையாக இருக்காது. அட்லீ கதை எழுதத் தொடங்கிவிட்டார். அந்த கதை பொதுவான கமெர்ஷியல் ஸ்கிரிப்டாகவே இருக்கும். ஷாருக் கானுக்காக எழுதி அதன்பிறகு மாற்றுவது சரியிருக்காது என்று நினைக்கிறார். எதுவாக இருந்தாலும் ஸ்கிரிப்ட் முடிந்த பிறகு தான் தெரியும். ஷாருக் கானும் முழு ஸ்கிரிப்டையும் படித்துப் பார்த்த பிறகே படத்தில் நடிக்க சம்மதம் சொல்வதை வழக்கமாகக் கொண்டவர்” என்று கூறுகின்றனர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share