aமெடிக்கல் திரில்லரில் அசுரன் நாயகி!

Published On:

| By Balaji

அசுரன் படத்தில் தனுஷின் காதலியாக நடித்த அம்மு அபிராமி புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

வளர்ந்து வரும் நடிகையான அம்மு அபிராமி, கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, விஷ்னு விஷாலின் ராட்சசன் ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றவர். சமீபத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் இவர் நடித்த பாத்திரம் ரசிகர்களை ஈர்த்தது. தனுஷின் காதலியாக ‘பிளாஷ்-பேக்’கில் வரும் அம்மு அபிராமி நடித்த காட்சிகள் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

இந்நிலையில், அசுரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அம்மு அபிராமி முதன் முறையாக கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ள படம் ‘பேட்டரி’. மணிரத்னம், வசந்த், சரண் போன்ற முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணி பாரதி இப்படத்தின் மூலம் இயக்குநராகவுள்ளார்.

மெடிக்கல் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கவுள்ளது. இப்படப்பூஜையில் இயக்குநர் லிங்குசாமி கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவிருக்கிறது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி படத்திலும் அம்மு அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவிருக்கிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share