கோகுலாஷ்டமி சிறப்புக் கவிதை: ஸ்ரீ க்ருஷ்ணம்! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

 

ஸ்ரீராம் சர்மா

ஆவணி மாதம்

அஷ்டமி திதி

ரோகிணி நக்ஷத்ரம்

ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்!

***

மழை

சிறை

நாகக் குடை

வசுதேவ யாத்திரை!

***

தேவகி குடல் விளக்கம்

யஸோதா ஜென்ம புண்யம்

கோகுலம், வேணு கானம்

வெண்ணெய் மோகம், வேதாந்த மௌனம்!

***

பூதகி முலைபங்கம்

சக்கடாச்வர வதம்

ராதா ஆலிங்கனம்

ருக்மணி சௌபாக்கியம்!

***

யமுனா நதி தீரம்

யாதவ குல வீரம்

காளிங்க நர்த்தனம்

ஆயர்பாடி புண்ணியம்!

***

கோபிகா லோலம்

நாட்டியம், நவரசம்

கொடும் மாமன் கம்ஸ வதம்

அஹங்கார பங்கம், மோக்ஷம்!

***

கோவர்தன கிரிதாரம்

மதுராபுரி அரசாங்கம்

மனுநீதி ப்ரயோகம்

குசேலன் இருவிழி ப்ரவாகம்!

***

பாண்டவர் தூது

கௌரவர் அவமதிப்பு

போர் நிறுத்தப் போராட்டம்

அவமானம், பாஞ்சாலி மானம்!

***

குருக்ஷேத்ரம்

பாஞ்சஜன்யம்

விஸ்வரூபம்

அர்ஜுன தாகம்!

***

கீத போதகம்

பதினெண் அத்தியாயம்

மாயா விலக்கம்

பார்த்தன் தோள் வீரம்!

***

பதினெட்டு நாள் யுத்தம்

பலே பலே சாரதி கோலம்

கௌரவர் குல நாசம்

பராக்ரமம், பாண்டவர் ஜெயம்!

***

கோகுலாஷ்டமி தினம்

ஸ்ரீகிருஷ்ண மோகம்

மனையெங்கும் மாக்கோலம்

மங்கலம், மாவிலைத் தோரணம்!

***

அந்தி மயங்கும் நேரம்

விட்டுவிட்டு கேட்கும் வேணுகானம்

ஏழை மனம் கூச்சரிக்கும் – இது

யதுகுலத்தான் வரும் நேரம்!

**சகலம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்!!**

————————————————————————————————–

ஸ்ரீராம் சர்மா எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதனைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திருஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன் ஸ்ரீராம் சர்மா.

*

 

 

 

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

 

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**

**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**

**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**

**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

**சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share