ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் சிறப்பு முகாம்கள்!

Published On:

| By admin

அரியலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 38 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளை தன்னிறைவு பெற்ற ஊராட்சிகளாக மாற்றும் நோக்கில் வேளாண்மை சார்ந்த அனைத்து துறைகளும் இணைந்து நேற்று (ஜூன் 7) 38 கிராம ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 37 பஞ்சாயத்துக்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி இரண்டில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் பஞ்சாயத்துக்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்தச் சிறப்பு முகாம்களில் பட்டா மாறுதல், வண்டல் மண் எடுத்தல், பயிர் கடன் மற்றும் உழவர் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறுதல் மற்றும் அனுமதி வழங்குதல், பயிர் காப்பீடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு குறித்த பணிகள் நடைபெற்றன. இந்தச் சிறப்பு முகாம்களில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share