தற்போதைய நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பானங்களை அவ்வப்போது எடுத்துக்கொள்வது நல்லது. அதற்கு இந்த ஆப்பிள் – வெள்ளரி – தக்காளி ஜூஸ் உதவும். அனைவரும் அருந்தலாம். ஆரோக்கியம் பெறலாம்.
**எப்படிச் செய்வது?**
ஒரு ஆப்பிள், ஒரு வெள்ளரியைத் தோல் நீக்கியும், இரண்டு தக்காளியைக் கழுவி தோல் நீக்காமலும் துண்டுகளாக நறுக்கவும். இதை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு ஐஸ்கட்டி சேர்த்து அரைத்து, வடிகட்டாமல் சிறிதளவு தேன் சேர்த்து அருந்தவும்.
**சிறப்பு**
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். செரிமானக் குறைபாடுகளைச் சரிசெய்யும். செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் இதில் நிறைந்துள்ளதால், தேகம் பொலிவு அடையும்.�,