மன்னிக்கவும் ! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

மின்னம்பலத்தார்களுக்கு வணக்கம் !

[‘நாளைய தொடக்கம்’](https://minnambalam.com/k/2019/09/07/106) என்னும் தலைப்பிட்ட நேற்றைய எனது கட்டுரையில் ஒரு பிழை நேர்ந்துவிட்டது. அந்தக் கட்டுரையின் துவக்கத்தில்…

“ஆரம்பத்தில் ஜீலை 14 ஆம் தேதிதான் சந்திராயன் 2 லாஞ்ச் குறிக்கப் பட்டிருந்தது. அது, செப்டெம்பர் 6 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டுக்கும் இடையே சரியாக 24 நாட்கள் இடைவெளி.

பின்பு எதிர்பாராத தொழில் நுட்பக் கோளாறுகளால் திட்டம் தடைபட்டு மீண்டும் 22 தேதி லாஞ்ச் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், லாண்டிங் நாள் செப் 7 என்று குறிக்கப்பட்டது. சரியாக 17 நாட்கள்தான் இடைவெளி.”

என்று எழுதியிருந்தேன்.

மன்னிக்கவும். சரியான கணக்குப்படி ஜூலை 14 க்கும் செப்டம்பர் 6 க்கும் இடையே 55 நாட்கள் என்றுதான் இருந்திருக்க வேண்டும். போலவே 22 ஆம் தேதிக்கும் செப் 7 க்கும் இடையே 48 நாட்கள் என்றுதான் இருந்திருக்க வேண்டும்.

நடுவில் இருக்கும் ஆகஸ்ட் மாதத்தை கவனச் சிதறலில் அப்படியே விழுங்கி விட்டேன். அது குறித்த எனது மன்னிப்பை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.

இது ஒன்றை நமக்கு உணர்த்துகிறது.

கண்ணில் தெரியும் கட்டுரையிலேயே இப்படி ஒரு ‘எர்ரர்’ நிகழ்ந்து, அது யார் கண்ணிலும் படாமல் தப்பித்து விடக் கூடும் என்றால்…

அந்தரத்தில் பம்பரம் விடுவதுபோல அண்டவெளியில் கண்ணுக்கே தெரியாத ஓரிடத்தில் போய் இறங்கிய ‘விக்ரம் லேண்டர்’ மிஷன் ?

ஹாலிவுட் பட பட்ஜெட்டின் நாலில் ஒரு பங்கில் தயாரான சந்திராயன் 2 திட்டம் 98 சதவிகிதம் வென்றிருக்கிறது என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து, வெறும் 150 கோடியில் விக்ரம் லேண்டரை மட்டும் தனியே தயாரித்து அனுப்பிவிட முடியும் எனக் கருத்து தெரிவித்திருக்கிறார் சந்திராயன் 1 திட்ட இயக்குனராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை.

எப்பேற்பட்ட ஓட்டப்பந்தய வீரரும் துவக்கத்தில் விழுந்து எழுந்துதான் நடை பழகியிருப்பார். பருவம் மாறும். காலம் கனியும். பிழையில்லா பயணம் ஒன்றால் நிலவின் தென்துருவம் வசப்பட்டே தீரும்.

இஸ்ரோவைக் கணக்குக் கேட்பது அப்புறம் இருக்கட்டும். பிழையின்றிக் கட்டுரை எழுதுவது எக்காலம் என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.

அறிவுக் கருவியுடன் அவத்தைபடும் பாட்டை எல்லாம்

பிறிவுபட இருத்திப் பெலப்படுவது எக்காலம் ?

அந்தரத்தில் நீர்பூத்து அலர்ந்தெழுந்த தாமரைபோல்

சிந்தை வைத்துக் கொண்டு தெரிசிப்பது எக்காலம் ?

– பத்ரகிரியார் !�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share