2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்!

public

ராஜஸ்தான் மாநிலத்தின் 2,000 திறமையான மாணவர்களுக்கான ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டத்துக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ராஜஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு இடையேயான சுற்றுப்பயணங்கள் மூலம் 2,000 திறமையான மாணவர்களுக்கு அந்த மாநிலங்களின் கலாச்சார பாரம்பரியம், இயற்கை பாரம்பரியம் மற்றும் மரபுகள் பற்றிய தகவல்கள் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் புலகி தாஸ் கல்லா தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், திறமையான மாணவர்களுக்கு சரியான வாய்ப்புகளும், கற்றலுக்கேற்ற சூழ்நிலையை உருவாக்கி தருவதே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வருடத்துக்காக 2,000 மாணவர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் புலகி தாஸ் கல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “ராஜஸ்தான் மாநிலத்தில் 2,000 திறமையான மாணவர்களுக்கான ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலம் திறமையான மாணவர்களுக்குத் தக்க பயிற்சியும், வாய்ப்புகளும் வழங்கப்படும். இது ராஜஸ்தான் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கான முக்கியமான படி” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தத் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை வாழ்த்திய கல்வி அமைச்சர், “இதற்காக மாநிலத்தின் அனைத்து திறமையான மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் மாண்புமிகு முதலமைச்சருக்கு நன்றி. இந்த முயற்சியை வரவேற்று இந்தத் திட்டத்தை நிறைவேற்றிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு மிக்க நன்றி” என்று கூறியுள்ளார்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.