தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் அனுஷ்கா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகவிருக்கும் ‘நிசப்தம்’ திரைப்படத்தின் ப்ரீ டீசர் வெளியாகியுள்ளது.
கோனா வெங்கட் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனங்களின் சார்பாக டி.ஜி.விஸ்வபிரசாத் தயாரிக்கும் இந்த படத்தில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். *ரெண்டு* படத்திற்குப் பிறகு 13 ஆண்டுகள் கழித்து நிசப்தம் மூலமாக அனுஷ்கா மாதவனுடன் இணைந்துள்ளார். இப்படத்தை ஹேமந்த் மதூர்கர் இயக்கியிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்னர் நிசப்தம் படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்’ வெளியிடப்பட்டிருந்தது. சாக்ஷி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுஷ்கா காது கேளாத, வாய் பேச இயலாத ஓவியராக நடித்திருக்கிறார். இசைக் கலைஞரான மாதவனின் மனைவியாக அவர் நடித்துள்ளார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ப்ரீ டீசரில் மென்மையான ஒரு இசையின் பின்னணியில் அமைதியான காட்சிகள் வந்து செல்கிறது.
புலனாய்வு திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் *கில் பில்* என்ற ஆங்கில படத்தில் நடித்த மைக்கேல் மேட்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[நிசப்தம் ப்ரீ டீசர்](https://youtu.be/RkZhJ1aI6tI)
�,