ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பலருக்கும் அதில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து சொல்ல தேவையே இல்லை, வேறு நிறத்திலான பொருட்களை எடுத்து வருவது, தாமதமாக பொருட்களை எடுத்து வருவது, தவறான முகவரிக்கு எடுத்து வருவது போன்ற தவறுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன. இது போன்ற தவறுகள் மிகவும் பொதுவானவை. நம்மால் எளிதாக சமாளிக்க முடிந்த பிரச்சனைகளே இவை.
ஆனால் சில தவறுகள் இந்த வரைமுறையை தாண்டியும் நடைபெறுகிறது. தவறான ஒரு பொருள் அதாவது நாம் வாங்கியதற்கு மாற்றான பொருள் நமக்கு வந்து சேர்ந்தால் அது மிகவும் எரிச்சலை உண்டாக்கும். ஆனால் பூனாவைச் சேர்ந்த ஒருவருக்கு, தான் ஆர்டர் செய்த பொருள் அல்லாமல் மாறிவந்த பொருள் அதிர்ஷ்டத்தை அளித்திருக்கிறது.
கவுதம் என்ற பூனாவை சேர்ந்த நபர் ஜோஸ் சாஃப்ட்வேர் என்ற நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அமேசான் இணையதளத்தில் 300 ரூபாய் மதிப்புள்ள தோலுக்கான க்ரீம் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு வந்ததோ 19 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பாஸ் நிறுவனத்தின் ஹெட்போன்கள் ஆகும்.
Bose wireless earbuds (₹19k) delivered instead of skin lotion (₹300). @amazonIN support asked to keep it as order was non-returnable! ????????♂️???? pic.twitter.com/nCMw9z80pW
— Gautam Rege (@gautamrege) June 10, 2020
பொருள் மாறி வந்ததையடுத்து வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்ட கவுதமிற்கு அடுத்த அதிர்ச்சியாக அமேசான் இந்தியா அந்த பொருளை அவரையே வைத்துக்கொள்ள சொல்லி இருக்கிறது. இது குறித்தும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கவுதமின் பதிவை தொடர்ந்து ட்விட்டரில் பலரும் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
அமேசானில் இவ்வாறு தவறான பொருட்கள் தனக்கு ஏற்கனவே வந்துள்ளதாகவும் ஆனால் இந்த பொருட்களுக்கான நஷ்டம் அமேசான் நிறுவனத்தை சாராது என்றும், பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளை சாரும் என்றும் பலரும் தங்கள் கருத்துக்களை கவுதமின் பதிவிற்கு கீழே தெரிவித்து வருகின்றனர்.
** – பவித்ரா குமரேசன்**�,”