]மரக்கழிவுகளால் மாசுபடும் அமராவதி!

Published On:

| By Balaji

அமராவதி ஆற்றில் கொட்டப்படும் மரக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் அவ்வப்போது, இந்தப் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட இயற்கை ஆர்வலர்கள், அமராவதி ஆற்றின் கரையோரப்பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்களின் அனுமதியின் பேரில், நிழல் தரும் மரங்களை நட்டு வருகிறார்கள்.

இவர்கள், “கொழுமம், மடத்துக்குளம், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் ஆகிய பகுதிகளில் அமராவதி ஆற்றுப்பாதை அமைந்துள்ளது. அமராவதி ஆற்றுப்படுக்கையின் கரையோரப்பகுதிகளில் உள்ள பல்வேறு இன வளர்ந்த மரங்களை, மர வியாபாரிகள் எந்திரம் கொண்டு வெட்டுகிறார்கள். பின்னர் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள் துண்டு, துண்டுகளாக வெட்டப்பட்டு, கனரக வாகனங்களில் ஆட்கள் உதவியுடன் ஏற்றப்பட்டு பல்வேறு மர அறுவை நிலையங்களுக்குக் கொண்டு செல்கிறார்கள்.

மேலும், வெட்டப்பட்ட மரங்களின் கிளைகள் மற்றும் அறுவை செய்யப்பட்ட மரக்கழிவுகளை அமராவதி ஆற்றின் நீர் நிலைகளிலேயே கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர். இந்தக் கழிவுகள் மீது இவ்வழியாக செல்லும் வாகனத்தில் கொண்டு வரப்படும் பல்வேறு கழிவுகளும், இதன் மீது கொட்டப்படுகிறது. அமராவதி ஆற்றில் கொட்டப்படும் இந்த மரக்கழிவுகள், முற்றிலும் மாசுபடும் கழிவுகளாக மாறி, ஆற்றின் தண்ணீரை மாசுபடுத்தும். இதனால் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்தும்போது பல்வேறு நோய்களுக்கு ஆளாவதற்கும், சுகாதார சீர்கேடுகள் உருவாகவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share