iதேர்வு: மாணவர்களுக்குக் கூடுதல் நேரம்!

Published On:

| By Balaji

நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் சமீபத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, மார்ச் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26ஆம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறுகிறது. இதுபோன்று 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு நேரத்தை பள்ளிக் கல்வித் துறை நீட்டித்து இன்று அறிவித்துள்ளது. இதுவரை 2.30 மணி நேரம் தேர்வு நடைபெற்ற நிலையில், இந்த கல்வியாண்டு முதல் 3 மணி நேரமாக அதிகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படவுள்ளது. புதிய பாடத் திட்டத்தின் படி தேர்வு நடத்தப்படுவதால் கூடுதல் நேரம் வேண்டும் என்று மாணவர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு எழுதுவதற்கான கூடுதல் நேரம் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையின் போது, பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தத் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share