சவுதி அரேபியாவில் உள்ள ஒரு விமான நிறுவனம், முழு பெண் பணியாளர்களுடன் நாட்டின் முதல் விமான பயணத்தை நிறைவு செய்துள்ளது. பழமைவாத ராஜ்ஜியத்தில் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு மைல்கல்லாக இதை நடைமுறைப்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொடி கேரியர் சவுதியாவின் பட்ஜெட் துணை நிறுவனமான ஃப்ளையடீல், கடந்த வியாழனன்று தலைநகர் ரியாத்தில் இருந்து செங்கடல் கடற்கரை நகரமான ஜெட்டாவுக்கு ஒரு விமானம் அனுப்பப்பட்டதாக ஃப்ளைடீல் செய்தித் தொடர்பாளர் எமட் இஸ்கந்தராணி தெரிவித்தார்.
மேலும் ஏழு பேர் கொண்ட குழுவில் பெரும்பான்மை சவுதி பெண்களாக இருந்தார்கள், ஆனால் கேப்டன் மட்டும் வெளிநாட்டு பெண் என்று எமட் இஸ்கந்தராணி தெரிவித்தார். சவூதி அரேபியா விமான துறை அதிகாரிகள் விமானப் போக்குவரத்துத் துறையின் விரைவான விரிவாக்கத்தை உருவாக்கி சவூதி அரேபியாவை உலகளாவிய பயண மையமாக மாற்றும் திட்டங்களை ஆலோசனை நடத்தி செயல்முறைக்கு கொண்டு வருகிறார்கள்.
இதில், 2030ஆம் ஆண்டிற்குள் விமான துறைக்கு 100 பில்லியன்டாலர்கள் முதலீடுகளை ஈர்ப்பது, புதிய தேசியக் கொடி கேரியரை நிறுவுதல், ரியாத்தில் புதிய மெகா விமான நிலையம் கட்டுதல் மற்றும் முன்னேறுதல் பணி, ஐந்து மில்லியன் டன் சரக்குகள் ஏற்றுமதி/இறக்குமதி, வருடாந்திர போக்குவரத்தை மும்மடங்காக அதிகரிப்பது ஆகியவை அடங்கும்.
இந்நிலையில் சவூதி அரேபியா ராஜ்யத்தின் ஆட்சியாளரான, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், “பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு பல தசாப்தங்களாக நீடித்த தடையை நீக்குதல் மற்றும் பெண் உறவினர்கள் மீது ஆண்களுக்கு தன்னிச்சையான அதிகாரத்தை வழங்கும் பாதுகாவலர் விதிகளை தளர்த்துவது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மேற்பார்வையிட்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டில்தான் சவூதி அரேபியாவில் ஒரு விமானம் முதல் முறையாக ஒரு பெண் துணை விமானியுடன் பறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
.