oமது அருந்துவோர்: தமிழகத்தில் எத்தனை பேர்?

Published On:

| By Balaji

!

நாடாளுமன்றக் கூட்டத்தின்போது உறுப்பினர் ஒருவர் நாட்டில் மதுப்பழக்கம், கஞ்சா, போதை மாத்திரைக்கு எவ்வளவு பேர் அடிமையாக உள்ளனர் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சமூக நீதி அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில் தமிழகத்தில் 90 லட்சம் பேருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

‘நாடு முழுவதும் 15 கோடியே 1 லட்சத்து 16,000 பேருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அதிகம் பேர் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர்.

அங்கு 3 கோடியே 86 லட்சத்து 11,000 பேருக்கு மதுப்பழக்கம் உள்ளது. தமிழகத்தில் 90 லட்சம் பேர் மதுவுக்கு அடிமையாக உள்ளனர்.

நாடு முழுவதும் 2 கோடியே 90 லட்சம் பேர் கஞ்சா பயன்படுத்துகிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 1 கோடியே 20 லட்சத்து 31,000 பேர் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர். தமிழகத்தில் 1 லட்சத்து 4,000 பேர் கஞ்சா பயன்படுத்துகிறார்கள்.

நாடு முழுவதும் 1 கோடியே 86 லட்சத்து 44,000 பேர் போதை மாத்திரை பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் 1 லட்சத்து 54,000 பேர் போதை மாத்திரைக்கு அடிமையாக உள்ளனர்.

போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்கும் பணியில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 850-க்கும் அதிகமான ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்களும் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது’ என்று அந்தப் பதிலில் கூறப்பட்டுள்ளது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share