மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார்.
1997ஆம் ஆண்டு வெளியான இருவர் படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராயை சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குநர் மணிரத்னம். அறிமுகமான முதல் படத்திலேயே ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர், மணிரத்னமின் குரு, ராவணன் ஆகிய படங்களில் நடித்தார் ஐஸ்வர்யா. இதனைத் தொடர்ந்து, பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க திட்டமிட்டுள்ள மணிரத்னமுடன் மீண்டும் இணைந்தார் ஐஸ்வர்யா.
அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பார்த்திபன், ஜெயராம், அமலா பால், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்ய லக்ஷ்மி ஆகியோர் பொன்னியின் செல்வனில் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் நடிப்பதை முதலில் உறுப்படுத்தியது ஐஸ்வர்யா ராய் தான்.
இந்நிலையில், பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் அம்மா, மகள் என இரண்டு வேடங்களில் ஐஸ்வர்யா தோன்றவுள்ளார்.
லைகா நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். அமரர் கல்கியின் வரலாற்றுப் புனைவான இந்த பொன்னியின் செல்வனை தாய்லாந்தின் அடர்ந்த காடுகளுக்குள் படமாக்க சமீபத்தில் மணிரத்னம் லொகேஷன் தேர்வு செய்துள்ளார். முதல் கட்டப் படப்பிடிப்பு டிசம்பர் மாத இறுதியில் தொடங்கவுள்ளது.
இருவர், ஜீன்ஸ் படங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் மூன்றாவது முறையாக இரட்டை வேடங்களில் பொன்னியின் செல்வனில் தோன்றவுள்ளார்.�,