டெல்லி காற்று மாசுபாடு: டி20 போட்டிக்குச் சிக்கல்!

Published On:

| By Balaji

q

தீபாவளியைத் தொடர்ந்து டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாடு காரணமாக இந்தியா – வங்கதேசம் இடையே நடைபெறவுள்ள முதல் டி20 போட்டிக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளன. முதல் டி20 போட்டி நவம்பர் 3ஆம் தேதி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் காற்று மாசு குறியீடு 50க்கு கீழ் இருக்க வேண்டும். ஆனால், நேற்று (அக்டோபர் 27) இரவு நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 306 என மிக மோசமான நிலையில் இருந்தது. இது மோசமான அளவை குறிப்பதாகும்.

இந்த நிலையில், போட்டி நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் போட்டி நடைபெற இன்னும் சில நாட்களே இருப்பதால் மைதானத்தை மாற்ற முடியாது என்றும், அதற்குள் மாசு பிரச்சினை குறைந்துவிட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு இதே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டி ஒன்றில், காற்று மாசுபாடு காரணமாக இலங்கை அணியினர் மாஸ்க் அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share