பிரிட்டனுக்கான விமானங்களை ரத்து செய்த ஏர் இந்தியா!

Published On:

| By Balaji

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காத அளவுக்குப் பரவி வருவதால், இந்தியாவுக்கான விமான சேவையை பிரிட்டன் அரசு நிறுத்தியது. விமான போக்குவரத்து தடைக்கான சிவப்புப் பட்டியலில் இந்தியாவைச் சேர்த்தது. இதனையடுத்து, பிரிட்டனுக்கான அனைத்து விமானங்களையும் ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது.

வரும் 24ஆம்தேதி முதல் 30ஆம் தேதி வரை பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் மற்றும் இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நாட்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கான டிக்கெட் கட்டணம் திரும்ப கொடுக்கப்படும். விமான சேவை தொடர்பான புதிய அட்டவணை, பயணிகளுக்குப் பணத்தைத் திரும்ப வழங்குதல் மற்றும் தள்ளுபடி தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா கூறி உள்ளது.

இந்த நிலையில் பல நாடுகள் இந்தியாவை சிவப்புப் பட்டியலில் சேர்த்து இந்தியாவுடனான விமான போக்குவரத்தை ரத்து செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை தங்கள் நாட்டு விமானங்களை ரத்து செய்வதாக ஹாங்காங் விமான போக்குவரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது நாட்டு மக்களை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசும் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், இந்தியாவுக்கான உள்நாட்டு விமான சேவைகளும் பயணிகள் இல்லாமல் கடந்த ஒரு வாரக்காலமாக ரத்து செய்யப்படுவதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share