ஐரோப்பிய ஆணையம் கூடுதலாக இருபத்தி இரண்டு கோடி அமெரிக்க டாலர்களை உக்ரைனுக்கு நிதியுதவியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் 107ஆவது நாளாக நீடித்து வருகிறது. போரை நடத்த பல நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போதிலும், அது தோல்வியில் முடிந்தது. குறிப்பாக ஐ.நா. போன்ற உலக சர்வதேச அமைப்புகள் இந்த போரை நிறுத்த எல்லா முயற்சிகளையும் முன்னெடுத்த வைத்தன ஆனால் ரஷ்யா உக்ரேனை தாக்குவதில் முனைப்பாக இருந்து வருகிறது. உக்ரேன் நாட்டிற்கு உதவுவதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி, ஆயுத உதவி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் உதவிகளை வழங்கி வருகின்றன.
உக்ரேனில் பல நகரங்களை ரஷ்ய ராணுவம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி அழித்துள்ளன. இந்த போரில் இரு நாடுகளையும் சேர்ந்த பல ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் உக்ரேன் நாட்டு ஏற்றுமதியை ரஷ்ய படைகள் தடுத்து நிறுத்தி வைத்திருப்பதால், உக்ரைன் நாட்டில் கடும் பொருளாதார பாதிப்பு நிலவி வருகிறது.
உக்ரேன் நாட்டில், கோதுமை, சோளம், எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிலை நீடித்தால் உக்ரேன் நாட்டு மக்கள் பட்டினியில் தவிக்கும் நிலை ஏற்படும் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் போரால் சீரழிந்து கொண்டிருக்கும் உக்ரைன் நாட்டை காப்பாற்றுவதற்காக ஐரோப்பிய ஆணையம் கூடுதலாக 22 கோடி அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்குகிறது. மேலும், உலகின் முக்கிய ஏற்றுமதியாளரான உக்ரேனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சூழலில்,
ஐரோப்பிய ஒன்றியத்தில் உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது ஐரோப்பிய ஆணையம்.
.