எழுத்தாளர் ஸ்ரீராம் சர்மா மின்னம்பலத்தில் இன்று (மார்ச் 24) காலை எழுதியுள்ள ‘தாண்டவம் – லாஸ்யம்’ என்னும் சிறப்புக் கட்டுரையை நடிகரும் ஓவியருமான சிவகுமார் பாராட்டி மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
ஆழமாக, பரதக்கலையை அலசும் அருமையான கட்டுரை. அதில் நான் பெருமைப்படும் ஆனந்த தாண்டவம் பற்றிய வரிகள் நெகிழ்வைத்தந்தன” இவ்வாறு சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் ஸ்ரீராம் சர்மா பரத நாட்டியக் கலையின் வரலாற்றையும் அதன் சமகாலப் போக்கையும் ஆய்வுபூர்வமாக அலசி எழுதியுள்ளார். நடனக் கலையின் நிலை குறித்த ஆழமான பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஸ்ரீராம் சர்மா மின்னம்பலத்தில் வாரந்தோறும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். இவர் எழுதும் கட்டுரைகள் பலதரப்பட்ட மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுவருகின்றன.
சிவகுமார் பாராட்டியிருக்கும் ‘தாண்டவம் – லாஸ்யம்’ என்னும் சிறப்புக் கட்டுரைக்கான இணைப்பு: [லிங்க்](https://minnambalam.com/k/2018/03/24/12)�,”