பாக்கெட் உணவுகளில் செயற்கை கொழுப்புகளைக் குறைக்க நடவடிக்கை!

public

இதயத்தை பாதிப்பதால் பாக்கெட் உணவுப் பொருட்களில் செயற்கை கொழுப்புகளைக் குறைப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாக்கெட் உணவுகள், டின் உணவுகள் போன்றவற்றில் ‘டிரான்ஸ்பேட்டி ஆசிட்’ (டிஎஃப்ஏ – Trifluoroacetic acid) எனும் செயற்கை கொழுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. தாவர எண்ணெய், பல வகை ரசாயனங்கள் ஆகியவற்றுடன் ஹைட்ரஜனைச் சேர்த்து இந்த டிஎஃப்ஏவைத் தயாரிக்கிறார்கள்.

தாவர எண்ணெய், நெய் போன்றவற்றின் விலையை விட டிஎஃப்ஏ விலை குறைவாக இருக்கிறது. மேலும் அறை வெப்ப நிலையிலேயே அது சீராக இருக்கக்கூடியது. இதன் காரணமாக உணவு தயாரிப்பு நிறுவனங்கள் டிஎஃப்ஏவை உணவுகளில் அதிகமாகப் பயன்படுத்துகின்றன.

டிஎஃப்ஏ கலக்கப்படும் உணவுகளை சாப்பிட்டால் உடலில் உள்ள நல்ல கொழுப்பை அழித்துவிட்டு கெட்ட கொழுப்பு அதிகமாகிறது. இதன் காரணமாக இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்களில் கொழுப்பு தேங்குகிறது. இதனால் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் பலவகை இதய நோய்கள் ஏற்படுகின்றன என்று நிரூபிக்கப்பட்டு வருகின்றன.

எனவே உணவுப்பொருட்களில் உள்ள டிஎஃப்ஏவை 2023ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் நீக்கிவிடும்படி உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி இருக்கிறது. இதன் அடிப்படையில் இந்தியாவிலும் உணவுப் பொருட்களில் டிஎஃப்ஏவைக் குறைப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது உணவுப் பொருட்களில் 5 சதவிகிதம் அளவுக்கு டிஎஃப்ஏ பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் அதை 3 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு (2022) இதை இரண்டு சதவிகிதமாகக் குறைக்க உள்ளன.

இதற்காக இந்திய உணவு பாதுகாப்புத் தர கட்டுப்பாட்டு அமைப்பு (FSSAI – Food Safety and Standards Authority of India) புதிய விதிகளை உருவாக்குகிறது.

இதுகுறித்து எஃப்எஸ்எஸ்ஏஐ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அருண்சிங், “உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள இலக்குபடி இந்தியாவில் உணவுப் பொருட்களில் டிஎஃப்ஏவின் அளவைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த இலக்கை எட்டுவோம்” என்று உறுதியளித்துள்ளார்.

உலக அளவில் டிஎஃப்ஏ பயன்படுத்துவதால் ஆண்டுக்கு ஐந்து லட்சம் பேர் உயிரிழப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தெருக்களில் விற்கப்படும் உணவுப்பொருட்களில் மிக அதிக அளவில் டிஎஃப்ஏ சேர்க்கப்படுகிறது. சிலவகை திண்பண்டங்களில் 25 சதவிகிதம் அளவுக்கு டிஎஃப்ஏ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

**-ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.